விசாரணைக்காகு அழைத்த நடுவர்... நேரில் ஆஜரான விராட் கோலி!

மைக்-ட்ராப் கொண்டாட்ட சர்ச்சை காரணமாக விராட் கோலியை நேரில் அழைத்து அறிவுரை கூறியுள்ளார் போட்டி நடுவர்.
 | 

விசாரணைக்காகு அழைத்த நடுவர்... நேரில் ஆஜரான விராட் கோலி!

மைக்-ட்ராப் கொண்டாட்ட சர்ச்சை காரணமாக விராட் கோலியை நேரில் அழைத்து அறிவுரை கூறியுள்ளார் போட்டி நடுவர். 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 287 ரன்னும், இந்தியா 274 ரன்னும் எடுத்துள்ளன. இதனை தொடர்ந்து, இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. 

இந்த நிலையில், இன்றைய 3ம் நாள் ஆட்டத்திற்கு முன்பாக, இந்திய கேப்டன் விராட் கோலியை நேர்ல ஆஜராகும் படி போட்டி நடுவர் அழைத்துள்ளார். அப்போது போட்டி நடுவரான ஜெப் கிரௌ, கோலியின் பொறுப்புகள் மற்றும் நடத்தை குறித்து அறிவுரைகளை அவருக்கு வழங்கினார். 

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை ரன் அவுட் செய்த பிறகு, மைக்-ட்ராப் கொண்டாட்டத்தில் கோலி ஈடுபட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் போட்டி நடவர், கோலியை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளார். 

மேலும், கோலியின் இந்த செயலுக்காக அவருக்கு எந்தவித தண்டனையும் வழங்கப்படவில்லை. 

இங்கிலாந்துக்கு எதிராக கோலி, 2ம் நாள் ஆட்டத்தில் 149 ரன் அடித்து அசத்தினார். இங்கிலாந்து மண்ணில் கோலியின் முதல் சதம் அதுவாகும். அதன் மூலம், தன் மீதான விமர்சனங்களுக்கு கோலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP