சதம் அடித்த விக்ராந்த்: புகழ்ந்த அஸ்வின்!

நடிகர் விக்ராந்த்துக்கு கிரிக்கெட்டில் பெரும் ஆர்வம் உள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் 4வது டிஎன்சிஏ தொடரில் விளளாயடி வருகிறார். அவர் தான் விளையாடிய அணிக்காக சமீபத்தில் 97 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து அசத்தினார்.
 | 

சதம் அடித்த விக்ராந்த்: புகழ்ந்த அஸ்வின்!

நடிகர் விக்ராந்த்துக்கு கிரிக்கெட்டில் பெரும் ஆர்வம் உள்ளது அனைவரும் அறிந்ததே. சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடி வரும் விக்ராந்த், செலபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர்களில்  கிரிக்கெட் வீரர்கள் அளவுக்கு விளையாடி அசத்தி இருப்பார். 

இந்நிலையில் அவர் 4வது  டிஎன்சிஏ தொடரில் விளையாடி வருகிறார். அவர் தான் விளையாடிய அணிக்காக சமீபத்தில் 97 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் அந்த அணி இக்கட்டான சூழ்நிலையில் வெற்றி பெற்றது. 

இதுகுறித்து அஸ்வின் நடத்தி வரும் ஜென்செட் கிரிக்கெட் அகாடமி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் அஸ்வினும் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ராந்த்தை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். இதற்கு விக்ராந்த் நன்றி தெரிவித்துள்ளார். 

 

 

விக்ராந்த் தற்போது "பக்ரித்", "சுட்டுப்பிடிக்க உத்தரவு", "வெண்ணிலா கபடி குழு - 2" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP