டாப் 5 கிரிக்கெட் பணக்காரர்கள்!

உலகளவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு தான் ரசிகர்கள் மிகவும் அதிகம். அதே சமயம் கிரிக்கெட் போட்டிகளில் பிரபலமாகும் வீரர்களுக்கும் மவுசு அதிகம் தான்.
 | 

டாப் 5 கிரிக்கெட் பணக்காரர்கள்!

உலகளவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு தான் ரசிகர்கள் மிகவும் அதிகம். அதே சமயம் கிரிக்கெட் போட்டிகளில் பிரபலமாகும் வீரர்களுக்கும் மவுசு அதிகம் தான். அவர்கள் களத்தில் காட்டும் திறமைகள் அவர்களை சூப்பர் ஹீரோக்களாக்கும்.. அதே நேரம் மிகப்பெரிய பணக்காரர்களாகவும் அவர்களை மாற்றும். பெரும்பாலும் கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல் போட்டியில் தான் மிகுந்த பணக்காரர்கள் ஆவார்கள். அந்த வகையில் உலகளவில் பணக்கார கிரிக்கெட் வீரர்களாக இருக்கும் டாப் ஐந்து நட்சத்திரங்களை பார்ப்போம்..

டாப் 5 கிரிக்கெட் பணக்காரர்கள்!

ஷேன் வார்னே: 

உலக கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் வார்னே. ஐ.பி.எல் அறிமுக சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தலைமை தாங்கிய இவர், வெற்றிக்கரமாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்த பெருமை இவரை சேரும். பிரபலங்களின் நிகர மதிப்பின் இணையதளத்தை பொறுத்தவரை வார்னே ரூ.335 கோடி (50 மில்லியன் டாலர்) பெறுகிறார் என்று மதிபீடப்பட்டு இருக்கிறது.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட வார்னே, கிரிக்கெட் வர்ணனையாளராகவும், ஆஸ்திரேலியா அணியை ஊக்குவித்தும் வருகிறார். இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆலோசகராகவும் வார்னே செயல்பட்டார். இது தவிர, டிவி-ல் சீரிஸ் நிகழ்ச்சியிலும் அவர் இடம் பெற்றுள்ளார்.

டாப் 5 கிரிக்கெட் பணக்காரர்கள்!

விராட் கோலி:

உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்தாலும், விளையாட்டு வீரர்களில் அதிக மவுசு உள்ள பிரபலம் விராட் கோலி. நாட்டில் மிகப்பெரிய தொகையை பெரும் விளையாட்டு வீரர். கோலியின் நிகரமதிப்பு ரூ.402 கோடிக்கு (60 மில்லியன் டாலர்) மதிப்பிடப்பட்டுள்ளது.

விராட் கோலி, நாட்டின் டாப் பிராண்டுகளான புமா, எம்.ஆர்.எஃப், கோல்கேட் போன்றவற்றைகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதில் பல கோடிகளை அள்ளி உள்ளார். மேலும், இவருக்கு சொந்தமான வ்ரோங் ஃபேஷன் நிறுவனம், சீசெல் ஜிம் மற்றும் ஃபிட்னஸ் சென்டர் உள்ளது. இது தவிர, பிசிசிஐ-ன் ஏ+ பிரிவில் இடம் பெற்றிருக்கும் கோலி, ஆண்டிற்கு ரூ.7 கோடி பெறுகிறார். 

டாப் 5 கிரிக்கெட் பணக்காரர்கள்!

ரிக்கி பாண்டிங்:

ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டன் மற்றும் மிகச்சிறந்த பேட்ஸ்மேனான பாண்டிங், எதிரணிகளுக்கு சவாலாக இருந்தவர். ஆஸ்திரேலியா அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்த இவர், உலக கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையின் போது, மார்க்கட்டில் மிகவும் பிரபலமாக இருந்தவர்.

ரெக்சோனா, வால்வோலின் போன்ற டாப் பிராண்டுகளுக்கு ஒப்பந்தமானவர். தவிர வர்ணனையாளராகவும் இருந்தவர். இவர் பெயரில் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கான அறக்கட்டளையும் உள்ளது. தற்போது ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவருடைய நிகமதிப்பு ரூ.436 கோடி (65 மில்லியன் டாலர்) என மதிபீடப்பட்டு உள்ளது.

டாப் 5 கிரிக்கெட் பணக்காரர்கள்!

எம்.எஸ்.தோனி:

தோனியின் புகழ் பற்றி சொல்லி அறிய வேண்டியதில்லை. அண்மையில் ஐ.பி.எல் கோப்பையை வென்று உச்சத்தில் இருக்கிறார். இவருடைய நிகரமதிப்பு ரூ.690 கோடி (103 மில்லியன் டாலர்). பிசிசிஐ-ன் சென்ட்ரல் கான்ட்ராக்ட் பெற்றிருக்கும் தோனி, அதில் ரூ.5 கோடி பெறுகிறார்.

ஏர்செல், பெப்சி, சோனாட்டா, டிவிஎஸ் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களிடம் இருந்து ஸ்பான்சர் மற்றும் ஒப்பந்தங்களை தோனி பெற்று வருகிறார். இது தவிர, ஐஎஸ்எல்-ன் சென்னையின் எஃப்.சி அணியின் துணை உரிமையாளராக இருக்கும் தோனி, இந்தியா, ராஞ்சி அணிகளை வளர்ப்பதிலும் அவருடைய செல்வம் வளர்வதற்கு உதவிகரமாக இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாறான 'தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' படமும் பட்டையை கிளப்பியது.

டாப் 5 கிரிக்கெட் பணக்காரர்கள்!

சச்சின் டெண்டுல்கர்:

உலக கிரிக்கெட்டில் ஜாம்பவனாக இருப்பவர்.. ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், மிகவும் பிரபலம் என்பது ஊரறிந்த விஷயம். சச்சினின் நிகரமதிப்பு ரூ.791 கோடி (118 மில்லியன் டாலர்) ஆகும். கோ-கோலா, டோஷிபா, அடிடாஸ், பிஎம்எஃப் போன்ற பிரபல நிறுவனங்களுடன் இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஐஎஸ்எல்-ல் கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணியின் துணை உரிமையாளராக இருக்கிறார். 'பிளேயிங் இட் மை வே' என்ற தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார். அவரது வாழ்க்கை வரலாறு படமான 'சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்' வெளியானது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரங்களின் பேச்சாளர் ஆவார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP