இந்தியா ஜெயிக்க இந்த 5 தான் முக்கிய காரணமாம்!

இந்தியா டி-20 சீரிஸ் ஜெயிக்க இந்த ஐந்து தான் காரணமாம்!
 | 

இந்தியா ஜெயிக்க இந்த 5 தான் முக்கிய காரணமாம்!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா வென்று தொடரையும் கைப்பற்றியது. இந்த தொடரில் ராகுல் ஆட்டநாயகன் விருதையும், விராட் கோலி தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இந்த தொடரை இந்தியா வெல்வதற்கு முக்கியமாக இருந்த ஐந்து காரணங்கள் என்னவென்று தெரியுமா?

இந்தியாவின் பேட்டிங்.. இந்த தொடரின் 3 போட்டிகளிலும் இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது.

இந்தியா ஜெயிக்க இந்த 5 தான் முக்கிய காரணமாம்! 

பந்துவீச்சில் துல்லியம்... இந்திய அணியின் பந்து வீச்சு இந்த தொடர் முழுக்கவே பலனளித்தது. குறிப்பாக, இளம் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகள் மிக துல்லியமாக இருந்தன. இரு அணி வீரர்களுமே இந்த தொடரில் ரன்களை குவித்தாலும், இந்திய அணியின் பந்துவீச்சாளர்களான சாஹல், சுந்தர், தீபக் ஆகியோர் களத்தில் சிறப்பாக செயல்பட்டனர். 

கேப்டன்ஷிப்... விராட் கோலியின் சிறப்பான  கேப்டன்ஷிப் இந்த தொடரில் நன்கு வெளிப்பட்டது. பந்துவீச்சாளர்களை மாற்றியது முதல் அவரது ஒவ்வொரு முடிவுக்கும் கைமேல் பலன் கிடைத்தது வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

இந்தியா ஜெயிக்க இந்த 5 தான் முக்கிய காரணமாம்!

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் நிதானமில்லாத பேட்டிங்கும் இந்திய அணி தொடரை வெல்வதற்கு உறுதுணையாக இருந்தது. தொடரை வெல்வதற்கு வாய்ப்புகள் இருந்தும், அந்த அணி வீரர்கள் அவசரமாக விளையாடி பரிதாபமாக தொடரைக் கோட்டை விட்டனர்.
இந்திய அணியின் 'பீல்டிங்' அடுத்த காரணமாக இருந்தது. முதல் இரண்டு போட்டிகளில் பல கேட்ச்களை தவறவிட்டாலும், இறுதி போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் அத்தனை கச்சிதமாக இருந்தது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP