இந்திய ராணுவத்தை விட சிறந்த உத்வேகம் எதுவும் இல்லை - விராட் கோலி

நமது இந்திய ராணுவ வீரர்களைத் தவிர சிறந்த உத்வேகம் எதுவும் இருக்க முடியாது; அவர்களுக்காகவாவது நாம் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 | 

இந்திய ராணுவத்தை விட சிறந்த உத்வேகம் எதுவும் இல்லை - விராட் கோலி

நமது இந்திய ராணுவ வீரர்களைத் விட சிறந்த உத்வேகம் எதுவும் இருக்க முடியாது; அவர்களுக்காகவாவது நாம் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 30ஆம் தேதி இங்கிலாந்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இதில் இந்தியா உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. ஜூன் 5ஆம் தேதி முதல் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 

உலகக்கோப்பை போட்டிக்காக இன்று விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து செல்கிறது. இந்நிலையில், நேற்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது பேசிய விராட் கோலி, "ஒவ்வொருவரது வாழ்விலும் நாம் சிறப்பாக செயலாற்ற நமக்கு ஒரு உத்வேகம் இருக்கும். நாம் வெற்றிபெற அந்த உத்வேகம் தான் முக்கிய காரணமாக இருக்கும். ஆனால், அனைவர்க்கும் பொதுவான, முக்கியமான ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நமது இந்திய ராணுவ வீரர்களை விட சிறந்த உத்வேகம் எதுவும் இருக்க முடியாது என்று கருதுகிறேன். அவர்கள் இந்நாட்டிற்காக ஆற்றிய சேவையை நினைத்து, இந்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP