உலகக்கோப்பை தொடர் சவாலானது; தோனி பெரிய வீரராக திகழ்வார் - ரவி சாஸ்திரி

முந்தைய உலகக் கோப்பை தொடரை விட தற்போதைய தொடர் சாவாலனதாக இருக்கும் என்றும், இந்த உலக்ககோப்பையில் தோனி பெரிய வீரராக திகழ்வார் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மும்பையில் இன்று தெரிவித்துள்ளார்.
 | 

உலகக்கோப்பை தொடர் சவாலானது; தோனி பெரிய வீரராக திகழ்வார் - ரவி சாஸ்திரி

முந்தைய உலகக் கோப்பை தொடரை விட, தற்போதைய தொடர் சாவாலனதாக இருக்கும் என்றும், இந்த உலக்ககோப்பையில் தோனி பெரிய வீரராக திகழ்வார் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மும்பையில் இன்று தெரிவித்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 12-ஆவது உலகக்கோப்பை போட்டி வரும் 30-ஆம் தேதி இங்கிலாந்தில் ஆரம்பமாகிறது. இதில், 10 அணிகள் இடம்பெறுகின்றன. ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 46 ஆட்டங்கள்  நடைபெறவுள்ளது. 

உலகக்கோப்பை தொடர் சவாலானது; தோனி பெரிய வீரராக திகழ்வார் - ரவி சாஸ்திரி

இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்று இரவு இங்கிலாந்து செல்கிறது. அதற்கு முன்பாக மும்பையில் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, ‘முந்தைய உலகக் கோப்பை தொடரை விட தற்போதைய தொடர் சாவாலனதாக இருக்கும். ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் கூட தற்போது வலுவாக உள்ளன. சவாலை முறியடித்து இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். இந்திய அணியில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கருதுகிறேன். சவாலை பற்றி கவலைப்படாமல் சாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளோம். சவாலை வீரர்கள் கருத்திக்கொள்ளாமல் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்’ என்றார்.

மேலும், ’இந்த உலக்கோப்பையில் தோனி முக்கிய பங்கு வகிப்பார். இந்த வடிவ கிரிக்கெட்டில் அவரை விட சிறந்தவர் இல்லை. குறிப்பாக தோனியின் சிறிய அசைவுகள், ஆட்டத்தை மாற்றக்கூடியதாக இருக்கும். இந்த உலகக்கோப்பையில் தோனி பெரிய வீரராக திகழ்வார்’ என்று ரவிசாஸ்திரி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP