ரசிகர்களின் அன்பும், அக்கறையும்...வாட்சன் நெகிழ்ச்சி!

ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வீரரான ஷேன் வாட்சன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
 | 

ரசிகர்களின் அன்பும், அக்கறையும்...வாட்சன் நெகிழ்ச்சி!

ரசிகர்கள் தன் மீது  வைத்துள்ள அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வீரரான ஷேன் வாட்சன் நெகிழ்ச்சியுடன்  தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2019  இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணியும், மும்பை அணியும் மோதின. போட்டியின்போது, சிஎஸ்கே அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஷேன் வாட்சனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. ஆனால் அவர், அந்த வலியை பொருட்படுத்தாமல் காயத்துடனே ஆட்டத்தின் இறுதி வரை பேட்டிங் செய்து சிஎஸ்கேவின் வெற்றிக்காக போராடினார்.

வாட்சனுக்கு ரத்த காயம்  ஏற்பட்ட விஷயத்தை, அணியின் சகவீரரான ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அது வைரலாக பரவியது.
இந்த நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக தமது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு திரும்பியுள்ள வாட்சன், தமது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "மும்பை இந்தியன்ஸ் உடனான ஃபைனலில், நான் ரத்த காயத்துடன் விளையாடியது குறித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் தங்களின் பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனது நலவிரும்பிகள் மற்றும் ரசிகர்களின் என் மீதான அக்கறை அறிந்து நெகிழ்ச்சியடைகிறேன். 

ஐபிஎல் தொடரில் எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஐபிஎல் இறுதிப்போட்டியில், வெற்றிக்கு மிக அருகில் சென்றும் அதனை தவறவிட்டோம். அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே இன்னும் வலுவுடன் களமிறங்கும்" என்று வாட்சன் தெரிவித்துள்ளார்.

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP