சாம் கர்ரானை சமாளிக்க அர்ஜூனுடன் பயிற்சி எடுத்த இந்திய அணி

இங்கிலாந்தின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான சாம் கர்ரானை சமாளிக்க, லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனுடன், வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது இந்திய அணி.
 | 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா, முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது. அந்த போட்டியில் இங்கிலாந்தின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கர்ரானை சமாளிக்க மிகவும் சிரமப்பட்டது இந்தியா. 

முதல் இன்னிங்சில் 50/0 ரன்னில் இருந்து 59 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்தது இந்தியா. முரளி விஜய், தவான், ராகுல் ஆகிய துவக்க வீரர்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர். அதன் பிறகு மீண்டும் பந்துவீச வந்த கர்ரான், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை கைப்பற்றினார். 

இதனால் கர்ரானை எதிர்கொள்ள, ஆல்-ரவுண்டர் அர்ஜுன் டெண்டுல்கருடன் வலைப்பயிற்சியில் ஈடுபட்டது இந்தியா. அர்ஜுன், இடதுகை வேகப்பந்து வீச்சாளராவார். சமீபத்தில் யு-19 அணியில் அறிமுகமான அர்ஜுன், கடந்த ஆண்டு விஜய், விராட் கோலிக்கு பந்துவீசி பயிற்சி எடுத்தார். தவிர, இந்திய மகளிர் அணிக்கும் அவர் பந்துவீசி பயிற்சி எடுத்துக் கொண்டார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP