கண்ணீருடன் ஓய்வை அறிவித்த பிரபல டென்னிஸ் வீரர்

இந்தாண்டு விம்பிள்டன் தொடருடன் இடுப்பு வலி காரணமாக டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரபல வீரர் ஆண்டி முர்ரே அறிவித்துள்ளார். இதனை கூறும் போது அவர் செய்தியாளர்கள் முன்பு கண்கலங்கினார்.
 | 

கண்ணீருடன் ஓய்வை அறிவித்த பிரபல டென்னிஸ் வீரர்

இந்தாண்டு விம்பிள்டன் தொடருடன்  இடுப்பு வலி காரணமாக டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரபல வீரர் ஆண்டி முர்ரே அறிவித்துள்ளார். 

பிரபல ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே. முன்னாள் முதல் நிலை வீரரான இவருக்கு டென்னிஸ் விளையாட்டின் போது பல முறை காயம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் சமீபத்தில் இவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு அவரால் அதில் இருந்து மீண்டு வர முடியவில்லை. 3 முறை கிராண்ட் ஸ்லாம் வெற்றியாளரான இவர் தனது ஓய்வை தற்போது அறிவித்துள்ளார். 

வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள விம்பிள்டன் போட்டியுடன் தான் ஓய்வு பெற இருப்பதாக அவர் கூறியுள்ளார். அது வரை தன்னால் முயன்ற வரை தாக்குப்பிடிப்பேன் என அறிவித்துள்ளார். 31 வயதான முர்ரே இந்த அறிவிப்பை கூறும் போதே கண்ணீர் விட்டு அழுதார். தனது இடும்பு வலியை சரி செய்வதற்காக என்ன செய்ய முடிமோ அவற்றை எல்லாம் செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP