சிட்னி டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 303 ரன்கள்!

சிட்னியில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 303 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 130 ரன்களும், ஹனுமன் விஹாரி 39 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
 | 

சிட்னி டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 303 ரன்கள்!

சிட்னியில் நடைபெற்று வரும்  4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 303 ரன்கள் எடுத்திருந்தது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற  இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இந்தியாவின் தொட்கக ஆட்டக்காரர்களாக மாயங்க் அகர்வால் மற்றும் எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர். இதில் கே.எல்.ராகுல்  9 ரன்களில் விக்கெட்டை இழக்க தொடர்ந்து புஜாரா விளையாட களம் இறங்கினார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மாயங்க் அகர்வால் 77 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை பறிக்கொடுக்க விராட் களமிறங்கினார். 

 

 

இந்தாண்டின் முதல் போட்டியான இதில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 23 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். மற்றொரு பக்கம் புஜாரா 130 ரன்கள் எடுத்து அசத்தி வந்தார். உடன் விளையாடிய ரகானே 18 ரன்கள் மட்டும் எடுத்து ஸ்டார்க் பந்தில் வெளிறேயினார். இதனையடுத்து புஜாராவுடன் விஹாரி ஜோடி சேர்ந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 303 ரன்கள் எடுத்திருந்தது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP