1. Home
  2. விளையாட்டு

37 வருடங்களுக்கு பிறகு மெல்போர்னில் வெற்றி; 3வது டெஸ்ட்டை கைப்பற்றியது இந்தியா!

37 வருடங்களுக்கு பிறகு மெல்போர்னில் வெற்றி; 3வது டெஸ்ட்டை கைப்பற்றியது இந்தியா!

.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 37 வருடங்களுக்கு பிறகு மெல்போர்ன் மைதானத்தில் வெற்றி பெறும் இந்தியாவுக்கு இது பாக்சிங் டே டெஸ்ட்டில் முதல் வெற்றியாகும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 -வது டெஸ்ட் போட்டி புதன்கிழமை மெல்போர்ன் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 443 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது.

தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸி அணி, 151 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தடுமாறிய இந்திய அணி 37.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து இருந்தபோது தனது 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணையித்தது.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்களை இழக்க தொடங்கியது. இந்நிலையில் 4வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 258/8 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மழையால் உணவு இடைவேளை வரை வீரர்கள் விளையாட வில்லை. பின்னர் ஆட்டம் தொடங்கியது. நிலைத்து ஆடிய கம்மின்ஸ் உட்பட அடுத்தடுத்து 2 விக்கெட்களை இந்தியா பறித்தது.

இதனையடுத்து 89.3 ஓவர்கள் முடியில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-2 என்ற நிலையில் இந்தியா தற்போது முன்னிலையில் உள்ளது.

மேலும் பார்டர் கவாஸ்கர் கோப்பை இந்தியாவிடமே தற்போதும் உள்ளது. 37 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி மெல்போர்ன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இது இந்தியாவுக்கு முதல் பாக்சிங் டே போட்டி வெற்றியாகும்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like