இலங்கை - இங்கிலாந்து 2வது டெஸ்ட்; முன்னோட்டம்

இலங்கை சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்த இலங்கை அணி, கண்டியில் நாளை துவங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் களமிறங்குகிறது.
 | 

இலங்கை - இங்கிலாந்து 2வது டெஸ்ட்; முன்னோட்டம்

இலங்கைக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள இங்கிலாந்து அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்த இலங்கை அணி, கண்டியில் நாளை துவங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் களமிறங்குகிறது. இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடைசியாக 2016ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, அதன் பிறகு தற்போதுதான் முதல்முறையாக வெளிநாட்டில் வைத்து வெற்றி பெற்றுள்ளது. இதனால், அடுத்த போட்டியில் வெற்றி பெறும் நம்பிக்கை இங்கிலாந்து வீரர்களுக்கு அதிகரித்திருக்கும். இலங்கை அணி கடந்த 13 டெஸ்ட் போட்டிகளில் 6 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று,  3ல் தொற்றுள்ளது. ஆனால், சமீப காலமாக இலங்கை பெருமளவு நம்பியிருந்த சந்திமால் மற்றும் ரங்கனா ஹெராத் இந்த போட்டியில் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாக அமையும். 

அதே போல தனஞ்செயாவின் சுழற்பந்துவீச்சின் மீது சர்ச்சை எழுந்துள்ளது அவரது விளையாட்டில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தலாம். அணியின் மேலாளர் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ததும் இலங்கை அணியின் பிரச்சனைகளுக்கு உதவவில்லை. அட்டகாசமான பந்துவீச்சை கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த அதிக வாய்ப்புள்ளது. கண்டியின் பிட்ச் இங்கிலாந்துக்கு உதவ வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

வீரர்கள் பட்டியல் (எதிர்பார்க்கப்படும்)

இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், கீட்டன் ஜென்னிங்ஸ், பட்லர், ரூட், ஸ்டோக்ஸ், மொயீன் அலி, பென் ஃபோக்ஸ், சாம் குர்ரான், அதில் ரஷீத், ஜேக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.  

இலங்கை: கௌசல் சில்வா, டிமுத் கருணாரத்னே, ரோஷன் சில்வா, குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா, தில்ருவான் பெரேரா, சுரங்கா லக்மல், அகிலா தனஞ்செயா, புஷ்பகுமாரா

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP