அஸ்வின், ரோகித் சர்மாவுக்கு ஸ்பெஷல் பயிற்சி!

நாளை மறுநாள் அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் அஸ்வின் மற்றும ரோகித் சர்மாவுக்கு பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி சிறப்பு பயிற்சி கொடுத்துள்ளார்.
 | 

அஸ்வின், ரோகித் சர்மாவுக்கு ஸ்பெஷல் பயிற்சி!

நாளை மறுநாள் அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் அஸ்வின் மற்றும ரோகித் சர்மாவுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பா் 6ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக வலைப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக, இந்திய கிரிக்கெட் அணி, அடிலெய்ட் சென்றுள்ளது. அங்கு வந்த இந்திய அணி வீரர்களுக்கு, ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒரு நாள் ஓய்வுக்குப்பின், இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், ஒரு நாள் ஓய்வு கூட தேவையில்லை என்று ஒரு சில முக்கியமான வீரர்கள் நேற்று முதலே வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். ரோகித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இரு வீரர்கள் மட்டும் பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

When Hitman and Ash stepped out to get a feel of the nets #TeamIndia #AUSvIND

A post shared by Team India (@indiancricketteam) on

 

தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் தீவிர ஆலோசனையின்கீழ் ரோகித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP