வங்க தேச பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் ஸ்மித்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை காலம் அனுபவித்து வரும் முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். தற்போது வங்க தேச பிரீமியர் லீக் போட்டியில் விளையாட அனுமதி பெற்றுள்ளார்.
 | 

வங்க தேச பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் ஸ்மித்

முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். தற்போது வங்க தேச பிரீமியர் லீக் போட்டியில் விளையாட அனுமதி பெற்றுள்ளார். 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஓராண்டு தடைவிதித்துள்ளது. இதனால் பிரிமீயர் லீக் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறார். வங்க தேச பிரிமீயர் லீக் தொடரில் விளையாடுவதற்காக கொமிலா விக்டோரியன்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்தார்.

இதற்கு மற்ற அணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்க வங்க தேச கிரிக்கெட் போர்டு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் ஸ்மித் மீதான தடையை நீக்கியுள்ளது. இதுகுறித்து வங்க தேச கிரிக்கெட் வாரியம் கூறுகையில் ‘‘மற்ற அணிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் நாங்கள் முதலில் அனுமதி கொடுக்கவில்லை. இன்று நான்கு அணிகள் தனித்தனியாக, அவர்கள் தெரிவித்த எதிர்ப்பை திரும்பப் பெறுவதாக மெயில் அனுப்பியுள்ளனர்’’ என்று குறிப்பிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP