ராஜஸ்தான் கேப்டனாக ஸ்மித்: மும்பை பேட்டிங் செய்து வருகிறது

ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
 | 

ராஜஸ்தான் கேப்டனாக ஸ்மித்: மும்பை பேட்டிங் செய்து வருகிறது

ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். இனி வரும் போட்டிகளிலும் அவரே கேப்டனாக நீடிப்பார். நடப்பு தொடரில் ரஹானேவின் செயல்பாடுகள் சரியாக இல்லாததால் கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக ஸ்மித்தை கேப்டனாக ராஜஸ்தான் அணி நிர்வாகம் நியமித்துள்ளது.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கிய மும்பை அணி தற்போதைய நிலவரப்படி, 11 ஓவர்களின் முடிவில் 85 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. டி காக் அரைசதம் அடித்து விளையாடி வருகிறார். ரோகித் சர்மா 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP