அறிமுக டெஸ்டிலேயே காயமடைந்தார் ஷர்துல் தாகூர்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய இளம் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் காயமடைந்து வெளியேறினார்
 | 

அறிமுக டெஸ்டிலேயே காயமடைந்தார் ஷர்துல் தாகூர்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய இந்திய இளம் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் காயமடைந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். 

ஹைதராபாத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் இந்திய அணியில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அறிமுக வீரராக களமிறங்கினார்.  நிகழாண்டின் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகும் 5வது வீரர் இவர். மேலும் இவர் இந்திய அணிக்காக டெஸ்டில் களமிறங்கும் 294வது வீரர்  என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் போட்டியில் உமேஷ் யாதவ் உடன் இணைந்து புதிய பந்தில் பந்து வீசினார். முதல் ஒவரில் 1 ரன் விட்டுக்கொடுத்தார். 2வது ஓவரின் 4வது பந்தை வீசும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் அவருக்கு கணுக்கால் காயம் ஏற்பட்டதாக தெரியவந்ததையடுத்து,  இன்று முழுவதும் அவர் ஃபீல்டிங் செய்யமாட்டார் என   அறிவிக்கப்பட்டது. ஷர்துல் தாகூருக்கு ஸ்கேன் செய்து பார்த்த பிறகே மீதமுள்ள நான்கு நாட்கள் விளையாடுவாரா? என்பது குறித்து தெரியவரும். அறிமுக டெஸ்டில் வெறும் 10 பந்துகள் மட்டுமே வீசியுள்ளதற்கு  ஷர்துல் தாகூர் வருத்தம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP