உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ராயுடு இருப்பார்: கங்குலி

இந்தாண்டு நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியில் அம்பத்தி ராயுடு இருப்பார் என்றும் அவர் சிறப்பாக விளையாடி வருவதாகவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
 | 

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ராயுடு இருப்பார்: கங்குலி

நிகழாண்டில் நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியில் அம்பத்தி  ராயுடு இருப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரும் தலைவலியாக இருந்தது 4வது விக்கெட்டுக்கு யார் இறங்கி பேட்டிங் செய்வது என்ற கேள்வி தான். ஆனால் அதற்கு பதில் தரும் வகையில் அம்பத்தி ராயுடுவின் ஆட்டம் சமீபகாலமாக இருந்து வருகிறது. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அம்பத்தி ராயுடு, சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். 

இதே போல சமீபத்தில் நடந்த நியூசிலாந்து தொடரில் அவர் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக கடைசி ஒருநாள் போட்டியில் அவர் 90 ரன்கள் எடுத்திருந்தார்.

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ராயுடு இருப்பார்: கங்குலி

இந்நிலையில் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியுள்ளார். அவர் பேசும் போது, "ராயுடு மிகவும் சிறப்பாக விளையாடினார். அவர் நிச்சயம் உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறுவார் என்று நம்புகிறேன். உலகக்கோப்பைக்கான இந்திய அணி கிட்டத்தட்ட உருவாகி விட்டது என்றே நினைக்கிறேன்" என்றுதெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP