ஒருநாள் போட்டியில் 7,000 ரன்களை கடந்து ரோஹித் ஷர்மா புதிய சாதனை!

ஆசியக்கோப்பை தொடரின் நேற்றைய பாகிஸ்தானுடனான போட்டியில் சதமடித்ததன் மூலம், ஒருநாள் போட்டியில் 7000 ரன்களை அதிவேகமாக கடந்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ரோஹித் ஷர்மா.
 | 

ஒருநாள் போட்டியில் 7,000 ரன்களை கடந்து ரோஹித் ஷர்மா புதிய சாதனை!

ஆசியக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம், ஒருநாள் போட்டியில் 7000 ரன்களை அதிவேகமாக கடந்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ரோஹித் ஷர்மா.

துபாயில் நடைபெற்று வரும் 14வது ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 ஆட்டங்கள் விறுவிறுப்பாக செல்கின்றன. நேற்று எதிரும் புதிருமான இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது.

ஒருநாள் போட்டியில் 7,000 ரன்களை கடந்து ரோஹித் ஷர்மா புதிய சாதனை!

238 ரன்கள் என்பதை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் ரோஹித் ஷர்மா இணைந்து ஆக்ரோஷமாக விளையாடினர். தவான் 100 பந்துகளில் 16 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 114 ரன்களில் அவுட்டானார். ரோஹித் சர்மா கடைசி வரை அவுட்டாகாமல் 119 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 111 ரன்கள் குவித்தார். ரோஹித் ஷர்மா மற்றும் தவான் இணைந்து 210 ரன்கள் குவித்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பெருமையை பெற்றனர். இறுதியில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்த இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்தியாவுடனான முந்தைய போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. 

நேற்றைய போட்டியில், ரோஹித் ஷர்மா 94 ரன்கள் அடித்த போது ஒரு நாள் போட்டியில் 7,000 ரன்களை கடந்தார். இதுவரை 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 7,000 ரன்களை கடந்த 9வது இந்தியர் மற்றும் அதிவேகமாக 7,000 ரன்களை கடந்த 3வது இந்திய வீரர் எனும் சாதனையை படைத்தார். முன்னதாக கேப்டன் விராட் கோலி 161 போட்டிகளிலும், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 174 போட்டிகளிலும் 7,000 ரன்களை குவித்து முறையே முதல் மற்றும் இரண்டாமிடத்தில் உள்ளனர். ரோஹித் ஷர்மா இந்தப்போட்டியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 19வது சதத்தை பூர்த்தி செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP