ரோஹித், தவான் அதிரடியில் பஞ்சரானது பாகிஸ்தான்!

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சூப்பர் ஃபோர் சுற்று போட்டியில், துவக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றம் தவான் சதமடித்து அசத்த, இந்தியா 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.
 | 

டாஸ் வென்று முதலில் பேட் செய்தது பாகிஸ்தான். சரியான துவக்கம் கிடைக்காமல் பாகிஸ்தான் திணற, ஃபக்கர் ஸமான் 31 ரன்கள் அடித்தார். தொடர்ந்து வந்த சர்ப்ராஸ்(44) மற்றும் ஷோயப் மாலிக்(78) இணைந்து 4வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்தனர். மீண்டும் சிறப்பாக பந்துவீசிய இந்திய பவுலர் பும்ரா, வெறும் 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் 237 ரன்கள் மட்டுமே எடுத்தது.

238 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் தவான் சதமடித்து பாகிஸ்தான் பந்துவீச்சை சிதைத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 210 ரன்கள் சேர்த்தனர். தவான் 114 ரன்களுக்கு அவுட்டாக, கேப்டன் ரோஹித் ஷர்மா 111 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார். 39.3 ஓவர்களிலேயே 238 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது இந்தியா.

முதல் இரண்டு சூப்பர் ஃபோர் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP