ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாது: பிசிசிஐ

மிதாலி ராஜ் கூறிய குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாது என்று பிசிசிஐ விரும்பவில்லை என்ற தெரிகிறது.
 | 

ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாது: பிசிசிஐ

மிதாலி ராஜ் கூறிய குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாது என்று பிசிசிஐ விரும்பவில்லை என்ற தெரிகிறது.

மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி, லீக் போட்டியில் தோல்வியையே  சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில்  தோல்வி அடைந்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. அந்த போட்டியில் மிதாலி ராஜை ஏன் சேர்க்கவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதில் மிதாலி ராஜ் மற்றும் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவார் ஆகியோர் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வந்தனர். பவார், பிசிசிஐ உயரதிகாரிகளில் சிலரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னை அணியில் இருந்து நீக்கிவிட்டதாக மிதாலி புகார் கூறினார். அதற்கு மறுப்புத் தெரிவித்த பவார், அணியில் மிதாலி ராஜ் பிளவு ஏற்படுத்த முயற்சித்ததாகவும், சுயநலத்தோடு விளையாடியதாகவும் கூறினார். இருவரின் அடுக்கடுக்கான புகார்களால் கிரிக்கெட் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நேற்று முடிவடைந்தது.  அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிதாலி ராஜ் உடனான பிரச்னையால் பிசிசிஐ அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. அதனால், பவாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாது என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP