ஐபிஎல்: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சு!

மும்பையில், இன்று ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டியானது இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியுள்ளது.
 | 

ஐபிஎல்: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சு!

2019 ஐபிஎல் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே, என 2 போட்டிகள் நடைபெறுகின்றன. 

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டியானது இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியுள்ளது. 

இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் டி காக் களமிறங்கியுள்னர். 

நடப்பு தொடரில் மும்பை இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்துள்ளன. சென்னைக்கு எதிராக,  கடந்த போட்டியில் தோல்வி அடைந்த ராஜஸ்தான், இதுவரை 5 தோல்விகளை சந்தித்து தடுமாறி வருகிறது. 

மும்பை, ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளும் இதுவரை 18 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி, மும்பை 10 போட்டிகளிலும், ராஜஸ்தான் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP