5000 ரன்களை கடந்து ஐபிஎல் சாதனை படைத்த ரெய்னா!

சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், 15 ரன்கள் அடித்த போது ஐபிஎல் வரலாற்றில் 5,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை சி.எஸ்.கே அணியின் ரெய்னா படைத்தார்.
 | 

பெங்களூரு அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. முதலில் பேட் செய்த பெங்களூரு வீரர்கள், சிஎஸ்கே-வின் சுழற்பந்து வீச்சில் சுருண்டதில், பெங்களூரு அணி 70 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

சிறிய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, இதுவரை 176 போட்டிகள் விளையாடி 4985 ரன்கள் அடித்திருந்தார். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்கள் அடித்த வீரர் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு கேப்டன் கோலி 163 போட்டிகளில் 4949 ரன்கள் அடித்திருந்தார். இருவருக்குமே 5000 ரன்களை இந்த போட்டியில் கடக்கும் வாய்ப்பு இருந்தது. 

இந்நிலையில், கோலி 6 ரன்களில் அவுட்டானார். சிஎஸ்கே அணிக்காக களமிறங்கிய ரெய்னா, 19 ரன்களில் அவுட்டானார். 15 ரன்கள் அடித்திருந்தபோது, ஐபிஎல் வரலாற்றிலேயே 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை ரெய்னா பெற்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP