ராகுல், பூரான் அதிரடி ஆட்டம்: கடைசி லீக் போட்டியில் சென்னை தோல்வி

மொகாலியில் நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 | 

ராகுல், பூரான் அதிரடி ஆட்டம்: கடைசி லீக் போட்டியில் சென்னை தோல்வி

மொகாலியில் நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி, பஞ்சாப்அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல், கெயில்  களமிறங்கினார்கள். கெயில் பொறுமையுடன் ஆட, ராகுல் அதிரடியாக ஆடினார். இதனால் 8 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ரன்களை கடந்தது. அடித்து ஆட முயற்சி செய்த கெயில் 28 பாலில் 28 ரன்கள் அடித்து ஹர்பஜன் பாலில் அவுட் ஆனார்.  அதே ஓவரில், அடுத்து ராகுலையும் தூக்கினார் ஹர்பஜன். 

தனது அடுத்த ஓவரில்  மயங்க் அகர்வாலின் விக்கெட்டையும் வீழ்த்தி ஹர்பஜன் அசத்தினார். பிறகு வந்த பூரான் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களின் பாலை சுத்தி சுத்தி அடித்தார். இவரின் விக்கெட்டை ஜடேஜா தூக்க,  மந்தீப் சிங், குர்ரன் உதவியுடன் 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் அடித்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ராகுல் 36 பாலில் 71 ரன்கள் அடித்தார். சென்னை அணி தரப்பில் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP