விறுவிறுப்பான ஆட்டத்தில் பெங்களூரிடம் வீழ்ந்தது பஞ்சாப் அணி

பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி போராடி தோற்றது.
 | 

விறுவிறுப்பான ஆட்டத்தில் பெங்களூரிடம் வீழ்ந்தது பஞ்சாப் அணி

பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி போராடி தோற்றது. 

பெங்களூரில் நடைபெற்ற இன்றைய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, அதிரடியாக விளையாடி, 202 ரன்கள் எடுத்தது. 20 ஓவர்களில், 203 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை துரத்திய பஞ்சாப் அணி வீரர்கள், துவக்கம் முதலே பொறுப்புடன் ஆடினர். 

ஒவ்வொரு ஓவர்கள் முடிய முடிய ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடிக்கொண்டே போனது. குறிப்பாக, 15 ஓவர்களுக்குப் பின், ஆட்டத்தின் போக்கு யாராலும் கணிக்க முடியாத வகையில் இருந்தது. போட்டி முடிவு, மதில் மேல் பூனை என்ற வகையிலேயே இருந்தது. 

எனினும், மிகச் சிறப்பாக விளையாடி பஞ்சாப் வீரர்கள், ஒரு கட்டத்தில்  போட்டியை தங்கள் பக்கம் கொண்டு சென்றனர். இதனால் பெங்களூரு அணி தோற்கும் நிலை உருவானது. ஆயினும், கடைசி ஓவர்களில், பெங்களூரு வீரர்கள், பந்து வீச்சில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தினர். 

இதனால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்பிற்கு, 185 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து பெங்களூரு ராயல் சாலஞ்ஜர்ஸ் அணி, 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP