இந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசுத்தலைவர் வாழ்த்து!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 | 

இந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசுத்தலைவர் வாழ்த்து!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதித்துள்ளது. இதில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. வரும் இரண்டு டெஸ்ட்  போட்டிகளில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. 

இன்றைய 3வது டெஸ்ட் ஆட்ட முடிவில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், கேப்டன் விராட் கோலிக்கும் இந்திய அணி வீரர்களுக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன. தொடர்ந்து வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

அதேபோன்று ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று 4வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. 25 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் தங்கம் வென்று அசத்தினார். அவருக்கும் குடியரசுத்தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP