சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து பாண்ட்யா, ராகுல் நீக்கம்!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமீபத்தில் பெண்களை பற்றி தவறாக பேசிய கிரிக்கெட் வீரர்கள் ஹர்டிக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
 | 

சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து பாண்ட்யா, ராகுல் நீக்கம்!

சமீபத்தில் ஒரு பிரபல இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களை பற்றி தவறாக பேசிய கிரிக்கெட் வீரர்கள் ஹர்டிக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் கே.எல் ராகுல் சமீபத்தில் 'காபி வித் கரண்' இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் டேட்டிங் பற்றி பேசிய அவர்கள், பெண்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் நியமித்த பிசிசிஐ நிர்வாக குழுவில் உள்ள பெண் உறுப்பினர் டயானா எடுல்ஜி, இரு வீரர்களையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பரிந்துரைத்தார். இதை தொடர்ந்து, இரண்டு போட்டிகளில் அவர்களை சஸ்பெண்ட் செய்யலாம் என கமிட்டியின் தலைவர் வினோத் ராய் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், முதல் போட்டியில் இருந்து இருவரும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP