கோலிக்கு பதிலாக களமிறங்கும் பாகிஸ்தான் வீரர்

கவுண்டி கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு பதிலாக பாகிஸ்தான் வீரர் அசர் அலி களமிறங்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
 | 

கோலிக்கு பதிலாக களமிறங்கும் பாகிஸ்தான் வீரர்

கவுண்டி கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு பதிலாக பாகிஸ்தான் வீரர் அசர் அலி களமிறங்க உள்ளார் என்று கூறப்படுகிறது. 

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்னர் கவுண்டி கிளப் அணியான சுர்ரேவில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் இந்த தொடருக்கு தயாராகும் வகையில் ஜூன் 14 முதல் 18ந்தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இருந்தும், அயர்லாந்துக்கு எதிரான தொடரில் இருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். 

இந்நிலையில் உடற்பயிற்சி செய்யும் போது, கோலியின் முதுகெலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் அந்த காயம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், பெரிய அளவிலான சிகிச்சை தேவையில்லை எனவும் கூறப்பட்டது. ஆனால் காயம் காரணமாக ஓய்வு தேவை என பிசிசிஐ அதிகாரிகள் கூறினர். இதனால் கோலி கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் கோலிக்கு பதிலாக பாகிஸ்தான் வீரர் அசர் அலியை களமிறக்க சுர்ரே அணி முயற்சித்து வருவதாக தெரிகிறது. மேலும் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், கவுண்டி கிரிக்கெட்டில் அசர் அலி மற்றும் அசத் ஷாபிக் ஆகியோர் களமிறங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் கவுண்டி கிரிக்கெட் அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP