பேச மட்டும் தான் தெரியும்: ஆஸி கேப்டனை கலாய்த்த ரிஷப் பன்ட்

மெல்போர்னில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் இந்திய அணி விளையாடிய போது பன்ட்டை கலாய்த்தது போல பெய்ன் பேட்டிங் செய்த போது பன்ட்டும் கலாய்த்து வருகிறார்.
 | 

பேச மட்டும் தான் தெரியும்: ஆஸி கேப்டனை கலாய்த்த ரிஷப் பன்ட்

மெல்போர்னில் நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் இந்திய அணி விளையாடிய போது பன்ட்டை கலாய்த்தது போல பெய்ன் பேட்டிங் செய்த போது பன்ட்டும் கலாய்த்து வருவது வைரலாகி வருகிறது. 

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகின்றன. 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 

இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில்  443 ரன்களும் ஆஸ்திரேலிய அணி 151 ரன்களும் எடுத்தன. இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 291 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது. சவாலான இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

முதலாவதாக இந்திய அணி பேட்டிங் செய்த போது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இந்திய அணியின் ரிஷப் பன்ட்டை கிண்டல் செய்தார். அவர், "ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் தோனி தேர்வு செய்யப்பட்டிருப்பது தெரியுமா? இதனால், உங்களின் ஆஸ்திரேலிய விடுமுறை நாள்களின் எண்ணிக்கை குறையும். நீங்கள் ஏன் ஹோபார்ட் ஹரிக்கேன் அணிக்காக விளையாடக் கூடாது? ஹோபார்ட் பொழுதுபோக்க சிறந்த நகரம். நீங்கள் என் குழந்தையைக் கவனித்துக்கொண்டால், நான் என் மனைவியுடன் சினிமாவுக்குச் சென்று வருவேன்" என்றார். இதெல்லாம் கீப்பர் மைக்கில் பதிவாகிறது.

 

 

இந்நிலையில் இதே போல தற்போது பெய்ன் பேட்டிங் செய்யும் போது பன்ட் கிண்டல் செய்து வருகிறார். "தற்காலிகக் கேப்டன் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவரை அவுட்டாக்க நீங்கள் சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. அவர் செய்வதெல்லாம் பேசுவது.. பேசுவது.. பேசிக்கொண்டே இருப்பது; இதை மட்டும்தான் அவர் செய்துகொண்டிருக்கிறார்’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார். 

இதனை ரசிகர்கள் ரசித்தாலும், அவர்கள் செய்யும் தவறை நாமும் செய்யக்கூடாது என்றும் சிலர் கூறி வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP