ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்துள்ள அணி!

அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 365 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
 | 

ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்துள்ள அணி!

அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 365 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், அயர்லாந்து ஆகிய அணிகள் விளையாடும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்து நாட்டில் உள்ள டப்ளின் நகரில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் வெஸ்ட்  இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜான் கேம்ப்பெல், விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் களமிறங்கி ஆடினர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 365 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தனர். 47.2 ஓவர்களில் தான் முதல் விக்கெட்டே விழுந்தது.

இந்த சாதனை மூலம், பாகிஸ்தான் அணியின் இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் ஜோடியின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்தது. மேலும், 48 ஆண்டு கால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் (365 ரன்கள்) இதுதான்.

இந்த போட்டியில், தனது முதல் சதத்தை அடித்த ஜான் கேம்ப்பெல் 179 ரன்களும், 5-வது சதத்தை அடித்த ஷாய் ஹோப் 170 ரன்களும் அடித்தனர். மேலும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்முறையாகும்.

இப்போட்டியில், 382 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய, அயர்லாந்து அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி அடைந்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP