6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

மும்பை இந்தியன்ஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இடையிலான ஐபிஎல் போட்டியில், பும்ராவின் அசத்தல் பந்துவீச்சால் மும்பை இந்தியன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 | 

6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

மும்பை இந்தியன்ஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இடையிலான ஐபிஎல் போட்டியில், பும்ராவின் அசத்தல் பந்துவீச்சால் மும்பை இந்தியன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மும்பை இந்தியன்ஸ்-க்கு எதிரான ஐபிஎல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. ரோஹித் ஷர்மா 48 ரன்களும், சூரியகுமார் யாதவ் 38 ரன்களும் அடிக்க, அதிரடி துவக்கம் பெற்றது மும்பை. ஆனால், அதன்பின், சஹால் சுழல் பந்துவீச்சில் நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவித்தது மும்பை. அதன் பின்னர் ஹர்டிக் பாண்டியா 14 பந்துகளில் 32 ரன்கள் விளாச, 20 ஓவர்கள் முடிவில் 8 விஸ்க்ட் இழப்பிற்கு 187 ரன்கள் சேர்த்து மும்பை.

தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணியின் துவக்க வீரர் மோயீன் அலி 13 ரன்களில் ரன் அவுட்டானார். தொடர்ந்து வந்த கேப்டன் விராட் கோலி 32 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார். மறுமுனையில் பார்த்தீவ் பட்டேல் 31 ரன்கள் அடித்தார். அதன்பின் வந்த டி வில்லியர்ஸ் 41 பந்துகளில் 6 சிக்சர்கள் 4 போன்று என 70 ரன்கள் விளாசினார். ஆனால் கடைசி கட்டத்தில் மும்பை பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி பெங்களூருவை கட்டுப்படுத்தினார். முக்கியமாக பும்ரா, விராட் கோலி உட்பட மூன்று முக்கிய விக்கெட்டுகளை எடுத்து கடைசி கட்டத்தில் பெங்களூர் அணியை சிதைத்தார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட, டி வில்லியர்ஸ் களத்தில் இருந்தும்கூட பெங்களூர் அணியால் 11 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP