திணறிய மும்பை அணி: சென்னைக்கு 150 ரன்கள் வெற்றி இலக்கு

ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில், சென்னை அணி வெற்றி பெற 150 ரன்களை இலக்காக மும்பை அணி நிர்ணயித்துள்ளது.
 | 

திணறிய மும்பை அணி: சென்னைக்கு 150 ரன்கள் வெற்றி இலக்கு

ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில், சென்னை அணி வெற்றி பெற 150 ரன்களை இலக்காக மும்பை அணி நிர்ணயித்துள்ளது.

இந்த போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக், ரோகித் ஷர்மா களமிறங்கினார்கள்.

சாஹர் வீசிய முதல் ஓவரில் 2 ரன்களே எடுக்கப்பட்டது. 2-வது ஓவரை வீசிய ஷர்துல் தாகூரின் 5-வது பந்தில் ரோகித் சிக்ஸர் அடித்தார். சாஹரின் அடுத்த ஓவரில் டி காக் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஆட்டத்தில் பவுண்டரிகள் அடிக்கப்படாமல் சிக்ஸர்களே இருந்தன. 

என்னடா இது... அதிரடி காட்ட தொடங்கிவிட்டார்களே என்று சென்னை ரசிகர்கள் சோகத்துடன் இருந்த நிலையில், ஷர்துல் தாகூர்  டி காக் விக்கெட்டை தூக்கினார். அடுத்த ஓவரில் சாஹர் ரோகித் விக்கெட்டை எடுத்தார். அதனுடன், அந்த ஓவர் மெய்டன் ஓவர் ஆனது.
டிகாக், ரோகித் இருவரின் கேட்ச்சுகளை தோனி பிடித்தார். ரோகித்தின் கேட்ச்சை பிடித்ததன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அதிக விக்கெட்டுகளை சாய்த்தவர்  (132 விக்கெட்) என்ற பெருமையை தோனி பெற்றார்.

இதன் பின்னர், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில், சூர்யகுமாரை போல்ட் ஆக்கினார் இம்ரான். இதையடுத்து களமிறங்கிய க்ருணல் பாண்ட்யாவை ஷர்துல் தூக்கினார். 

இவரைத்தொடர்ந்து வந்த பொல்லார்ட்,  இந்த தொடரில் ஃபார்மில் இல்லாமல் இருந்த நிலையில், சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதனிடையே, இஷான் விக்கெட்டை இம்ரான் வீழ்த்தினார். பிறகு அனைவரும் எதிர்பார்த்திருந்த ஹர்திக் பாண்ட்யா வந்தார். 

இனி அதிரடி தான் என என்று ரசிகர்கள் எதிர்பார்க்கையில், ஷர்துல் ஓவரில் பாண்ட்யா கொடுத்த சுலபமான கேட்சை  ரெய்னா   நழுவவிட்டார். இதன் பிறகு  ஒரு பவுண்டரி, சிக்ஸ் என பறக்கவிட்டார் ஹர்திக். பின்னர் இவரின் விக்கெட்டை சாஹர் எடுத்தார். அதே ஓவரில் ராகுல் சாஹர் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.  

பிராவோ வீசிய கடைசி ஓவரின் முதல் மூன்று பாலில் ரன்கள் எடுக்காமல் இருந்தது. அடுத்த பாலில் மிட்செல் ரன் அவுட் ஆனார். கடைசி இரண்டு பாலில் பவுண்டரிகளை விரட்டினார் பொல்லார்ட்.

இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு வெற்றி இலக்காக 150 ரன்களை நிர்ணயித்துள்ளது.

மும்பை அணியில் அதிகபட்சமாக பொல்லார்ட் 41*, டி காக் 29, கிஷன் 23 ரன்கள் அடித்தனர். சென்னை அணி தரப்பில் சாஹர் 3, தாகூர், இம்ரான்  தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP