சென்னை - ராஜஸ்தான் இடையே பலப்பரீட்சை: வெல்லப்போவது யார்?

எது எப்படியோ, இன்றைய போட்டியில் சுவாரஸ்யம் குறையாது என்பதை மட்டும் அடித்து கூற முடியும். வெளியூர் மைதானம், முக்கிய வீரர்கள் காயம் உள்ளிட்ட சில பாதகமான அம்சங்கள் இருந்தாலும், இன்றைய போட்டியில், சி.எஸ்.கே., வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது.
 | 

சென்னை - ராஜஸ்தான் இடையே பலப்பரீட்சை: வெல்லப்போவது யார்?

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகளை வெற்றி கொண்ட உற்சாகத்துடன், சென்னை வீரர்கள், ராஜஸ்தானையும் தோற்கடிக்கும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். 

இதுவரை, இந்த அணி விளையாடி, ஆறு போட்டிகளில், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. மீதமுள்ள, ஐந்து போட்டிகளிலும், சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது. 

ஹர்பஜன் சிங், தாஹிர் உள்ளிட்ட ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படுவது, இந்த அணிக்கு குடுதல் பலமாக அமைந்துள்ளது. எனினும் பிராவோ போன்ற வீரர்கள் இல்லாதது சற்று பின்னடைவே. 

அதே சமயம், போட்டியிட்ட ஐந்து ஆட்டங்களில், ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அதுவும், ஏற்கனவே, போட்டித் தொடரில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பை முற்றிலும் இழந்த ராயல் சாலஞ்ஜர்ஸ் பெங்களுரு அணியிடம் கிடைத்தது அந்த வெற்றி. 

அதுவும், ஜெய்ப்புர் மண்ணில் நடைபெற்ற போட்டி. இப்படி பல பாதகமான அம்சங்களுடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கினாலும், அவர்களின் சொந்த மண்ணில் ஆடும் ஆட்டம். தவிர, இந்த போட்டி, அந்த அணிக்கு வாழ்வா, சாவா என்ற முடிவை தரக்கூடியது. 

இதில் வெற்றி பெற்றால் மட்டுமே, அந்த அணி, இந்த தொடரில் உயிர்ப்புடன் நீடிக்க முடியும். இல்லையென்றால், பெங்களுருவை போல நடையை கட்ட வேண்டியது தான். 

எது எப்படியோ, இன்றைய போட்டியில் சுவாரஸ்யம் குறையாது என்பதை மட்டும் அடித்து கூற முடியும். வெளியூர் மைதானம், முக்கிய வீரர்கள் காயம் உள்ளிட்ட சில பாதகமான அம்சங்கள் இருந்தாலும், இன்றைய போட்டியில், சி.எஸ்.கே., வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது. 

- வி.இராமசுந்தரம் -
தொழில் அதிபர், கிரிக்கெட் விமர்சகர்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP