சொந்த மண்ணில் அதிக விக்கெட்: கும்ப்ளேவை சமன் செய்த ஆண்டர்சன்

உள்ளூரில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் முன்னாள் வீரர் இந்தியாவின் கபில் தேவை சமன் செய்துள்ளார் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
 | 

சொந்த மண்ணில் அதிக விக்கெட்: கும்ப்ளேவை சமன் செய்த ஆண்டர்சன்

உள்ளூரில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் முன்னாள் வீரர் இந்தியாவின் அனில் கும்ப்ளேவை சமன் செய்துள்ளார் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம், நேற்று மழைக்கு நடுவே நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி, 107 ரன்னுக்கு ஆல்-அவுட்டானது. பிட்ச்சின் ஈரப்பதம் காரணமாக பந்துகள் ஸ்விங் ஆனதில், விக்கெட்கள் சரிந்தன. இப்போட்டியில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட் எடுத்து அசத்தினார். 

அதன் மூலம், இங்கிலாந்தில் ஆண்டர்சன், 80 டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்களை பதிவு செய்து, சொந்த மண்ணில் அதிக விக்கெட் வீழ்த்தி வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், சொந்த மண்ணில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் 2ம் இடத்தை பிடித்துள்ள இந்திய வீரர் அனில் கும்ப்ளேவை (63 போட்டிகளில் 350 விக்கெட்கள்), ஆண்டர்சன் சமன் செய்தார். ஒட்டுமொத்தமாக ஆண்டர்சன் 140 போட்டிகளில் 546 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். 

சொந்த மண்ணில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில், இலங்கையின் முத்தையா முரளிதரன் (493) முதல் இடத்தில் உள்ளார். ஷான் வார்னே (319) 3-வது இடத்தில் இருக்கிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP