கலக்கிய ஸ்பின்னர்கள்: சென்னை அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்கு

விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது தகுதி சுற்றுப்போட்டியில், சென்னை அணி வெற்றி பெற 148 ரன்களை இலக்காக டெல்லிஅணி நிர்ணயித்துள்ளது.
 | 

கலக்கிய ஸ்பின்னர்கள்: சென்னை அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்கு

விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது தகுதி சுற்றுப்போட்டியில், சென்னை அணி வெற்றி பெற 148 ரன்களை இலக்காக டெல்லி அணி நிர்ணயித்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, தவான்  களமிறங்கினர்.

பிரித்வி ஷா (5 ரன்) சாஹர் பந்துவீச்சி எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து, சென்னை அணியின் ஸ்பின்னர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தவான்18, முன்ரோ 27, ஸ்ரேயாஸ் அய்யர் 13 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். ஒரு பக்கம் ரிஷாப் பாண்ட்  அதிரடி காட்டமுடியாமல் நிதானமாக விளையாடினார். 

அக்ஸர் பட்டேலின் விக்கெட்டை பிராவோவும், ரூதர்போர்டின் விக்கெட்டை ஹர்பஜனும் வீழ்த்தினார். ரூதர்போர்டின் விக்கெட்டை வீழ்த்தியன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டை எடுத்த 4 -ஆவது வீரர் என்ற பெருமையை ஹர்பஜன் பெற்றார். அடித்து ஆட முடியாமல் தவித்து வந்த பண்ட், சாஹர் பந்துவீச்சில் பிரவோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 18.4 ஓவர்களுக்கு 137-9 என இருந்தது. 

கடைசி ஓவரை வீசிய ஜடேஜாவின் பந்துவீச்சில், போல்ட் ஒரு சிக்ஸ், இஷாந்த் ஷர்மா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடிக்க, 20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

அதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 38, முன்ரோ 27 ரன்கள் அடித்தனர். சென்னை அணி தரப்பில் சாஹர், ஹர்பஜன் சிங், ஜடேஜா, பிராவோ தலா இரு விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹீர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP