சஹால் சூழலில் மிரண்ட மும்பை; பெங்களூருக்கு 188 இலக்கு

பெங்களூரு, மும்பை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில், அதிரடி துவக்கம் பெற்ற மும்பை, கடைசி ஓவர்களில் சஹாலின் சூழலில் விக்கெட்களை பறிகொடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.
 | 

சஹால் சூழலில் மிரண்ட மும்பை; பெங்களூருக்கு 188 இலக்கு

பெங்களூரு, மும்பை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில், அதிரடி துவக்கம் பெற்ற மும்பை, சஹாலின் சூழலில் 4 விக்கெட்களை பறிகொடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. துவக்க வீரர் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் டி காக் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தனர். 23 ரன்கள் எடுத்திருந்த போது, சஹால் பந்துவீச்சில் டி காக் அவுட்டானார். அதன்பின், ரோஹித் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து வந்தார்.

தொடர்ந்து வந்த சூரியகுமார் யாதவும் அதிரடி காட்டினார். 48 ரன்கள் எடுத்திருந்த போது ரோஹித் ஷர்மா விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பிறகு, வந்த யுவராஜ் சிங் 13வது ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர்கள் அடித்து சுழற்பந்து வீச்சாளர் சஹாலுக்கு நெருக்கடி கொடுத்தார். ஆனால், அடுத்த பந்திலேயே யுவராஜ் விக்கெட்டை வீழ்த்தினார் சஹால். 13.4 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தாலும், அடுத்து வந்து வீரர்கள் யாருமே நிலைக்கவில்லை.

சூரியகுமார் யாதவ் மற்றும் அதிரடி வீரர் பொல்லார்டு அடுத்தடுத்து சஹால் சூழலில் நடையை கட்டினார்கள். அதன்பின்னர் ஹர்டிக் பாண்ட்யா வெறும் 14 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரி அடித்து, 32 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது மும்பை. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP