பெங்களூரிடம் போராடி தாேற்றது கொல்கத்தா அணி

பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியை தழுவியது.
 | 

பெங்களூரிடம் போராடி தாேற்றது கொல்கத்தா அணி

பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியை தழுவியது. 

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. 214 ரன் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடத்துவங்கிய கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அப்போது ஜோடி சேர்ந்த ராணா மற்றும் ரசல் ஆகிய இருவரும், அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக ராணா அடிக்கடி சிக்சர் அடித்து, கொல்கத்தா ரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். குறிப்பாக ராணா அடிக்கடி சிக்சர் அடித்து, கொல்கத்தா ரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். 

ராணா மற்றும் ரசல் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். ரசல் அதிரடியாக ஆடியதில், கடைசி ஒரு ஓவரில், 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது.

எனினும், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணியால், 203  ரன்கள்  மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து, பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP