சதம் அடித்து கோலி மாஸ் ஆட்டம்: பெங்களூரு 213 ரன்கள் குவிப்பு

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா அணி வெற்றி பெற 214 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி.
 | 

சதம் அடித்து கோலி மாஸ் ஆட்டம்: பெங்களூரு 213 ரன்கள் குவிப்பு

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா அணி வெற்றி பெற 214 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி.

டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி, பார்த்தீவ் பட்டேல் களமிறங்கினர். 11 ரன் எடுத்திருந்தபோது பார்த்தீவ் பட்டேல் நரேன் பந்துவீச்சில் ரானாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்பிறகு வந்த நாத் 13 ரன்னில் அவுட் ஆக, பின்னர் வந்த மொயின் அலி கோலியும் சேர்ந்து கொல்கத்தா அணியின் பவுலர்களின் பாலை நாலபுறமும் சிதறவிட்டனர்.

அதிரடியாக ஆடிய மொயின் அலி 28 பாலில் 66 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவர் போனதும், கொஞ்சன் நிதனமாக ஆடிய கோலியும் அதிரடியாக ஆடி ஐபிஎல்லில் தனது 5-ஆவது சதத்தை பதிவு செய்தார். 57 பந்துகளில் கோலி சதம் அடித்தார். இதில், 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளும் அடங்கும்.

இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்து, கொல்கத்தா அணி வெற்றி பெற 214 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP