அயர்லாந்து டூர்: ஆப்கானிஸ்தான் டி20 & ஒருநாள் அணி அறிவிப்பு

அயர்லாந்துக்கு எதிரான ஆப்கானிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

அயர்லாந்து டூர்: ஆப்கானிஸ்தான் டி20 & ஒருநாள் அணி அறிவிப்பு

அயர்லாந்துக்கு எதிரான ஆப்கானிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதி முதல் டி20 தொடர், வடக்கு அயர்லாந்தின் பிரெட்டியில் தொடங்க இருக்கிறது. அதன் பிறகு, 27ம் தேதி முதல் ஒருநாள் தொடர் பெல்பாஸ்ட்டில் துவங்குகிறது. இந்த இரு தொடர்களுக்கான அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இரு தொடர்களுக்கான ஆப்கான் அணியை, அஸ்கார் ஸ்டானிக்ஸை வழி நடத்துவார். கடந்த ஓராண்டுக்கு மேலாக ஆப்கானிஸ்தான் அணியில் சிறப்பாக செயல்பட்டு, அனைவரது கவனத்தையும் பெற்று வரும் ரஷித் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மானும், மீண்டும் நம்மை கவர இருக்கின்றனர். 

ஒருநாள் அணி: முகமது ஷாஹ்சாட், ஜாவேத் அஹ்மதி, ஜனத், ரஹ்மத் ஷாஹ், அஸ்கார் ஸ்டானிக்ஸை (கேப்டன்), சாமியுல்லாஹ் ஷின்வரி, ஷாஹிடி, நஜிபுல்லாஹ், முகமது நபி, குல்படின் நைப், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், அப்டாப் அலம், சயீத் அஹ்மத், தவ்லாட் சட்ரன், வபாதர் மொமண்ட்.

டி20 அணி: முகமது ஷாஹ்சாட், உஸ்மான் காணி, சாசாய், ஷபிக், அஸ்கார் ஸ்டானிக்ஸை (கேப்டன்), சாமியுல்லாஹ் ஷின்வரி, அஷ்ரப், நஜிபுல்லாஹ், முகமது நபி, குல்படின் நைப், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், அப்டாப் அலம், பாரித் மாலிக்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP