ஐ.பி.எல் : டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை 2-ஆவது வெற்றி பெறுமா?

12-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 5-ஆவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
 | 

ஐ.பி.எல் : டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை 2-ஆவது வெற்றி பெறுமா?

12-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 5-ஆவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. 


சென்னை அணி தனது முதல் லீக் போட்டியில் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 70 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய சென்னை 18-ஆவது ஓவரில் தான் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் கலக்கினாலும், பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை.டெல்லியுடனான இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடினால் தான் வெற்றி பெற முடியும்.

டெல்லி அணி வெயிட்டான மும்பை அணியை (37 ரன்கள் வித்தியாசத்தில்) வீழ்த்திய தெம்போடு சென்னையை எதிர்கொள்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ரிஷாப் பான்ட்டின் அதிரடி சென்னைக்கு எதிராக தொடர்ந்தால், அது சென்னை அணிக்கே 'டேன்ஞர்' ஆகிவிடும். மேலும், அந்த அணியில் தவான், காலின் இங்ராம், பார்மில் உள்ளனர். பந்துவீச்சில் போல்ட், இஷாந்த் ஷர்மா, ரபடா கடந்த போட்டியில் மிரட்டினர்.

எனவே, சென்னை அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டால் ஓழிய டெல்லியை வீழ்த்தமுடியும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை 12 முறையும், டெல்லி 6 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. 

சென்னை - டெல்லி மோதும் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP