ஐபிஎல்: ராஜஸ்தானை துவம்சம் செய்தது பஞ்சாப் !

ராஜஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்ததால், பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 | 

ஐபிஎல்: ராஜஸ்தானை துவம்சம் செய்தது பஞ்சாப் !

மொகாலியில் இன்று (16ஆம் தேதி) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. 

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கெயில், ராகுல் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய கெயில் (30 ரன்) ஆர்ச்சர் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய அகர்வால் 26 ரன்களுக்கு வெளியேறினார்.

இதற்கடுத்து வந்த மில்லர், ராகுலுடன் ஜோடி சேர்ந்து, இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசதம் அடித்த ராகுல் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து, மில்லரும் 40 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேற, பஞ்சாப் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி ஓவரில் கேப்டன் அஸ்வினின் அடுத்தடுத்து அடித்த இரு சிக்ஸர்களால், அந்த அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 183 ரன்கள் நிர்ணயித்தது. 

பின்னர், ராஜஸ்தான் அணியின் ராகுல் திரிபாதி, ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஜோஸ் பட்லர் 23 ரன்களில் ஆட்டமிழந்ததால், சஞ்சு சாமசன் ஆட்டத்தை தொடர்ந்தார். 17வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ராஜஸ்தான். ராகுல் திரிபாதி அரை சதத்துடன் ஆட்டமிழந்தார். 

இறுதியில், 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்ததால், பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP