ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்ளும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி ஜெய்ப்பூரில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
 | 

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்ளும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை  நடத்துகின்றன. இந்த போட்டி ஜெய்ப்பூரில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

பந்தை சேதப்படுத்திற்காக தடை விதிக்கப்பட்ட காரணத்தால், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்காத ராஜஸ்தான் அணியின் ஸ்மித், இந்தாண்டு அணியில் இடம்பெற்றுள்ளார். அவரின் வருகை அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

ரஹானே, பென் ஸ்டோக்ஸ், பட்லர், சஞ்சு சாம்சன் என நட்சத்திர வீரர்கள் உள்ளதால் அந்த ராஜஸ்தான் அணியும், கெய்ல், ராகுல் பேட்டிங்கிலும், பந்துவீச்சில் அஸ்வின், ஷமி, தமிழகத்தைச் சேர்ந்த புதுமுக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியும் பஞ்சாப் அணியும் என இரு அணிகளும் சமபலத்துடனே இருக்கின்றன. இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP