ஐபிஎல்: 39 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி!

ஐதராபாத் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்ததால், டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 | 

ஐபிஎல்: 39 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபறெ்ற இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழத்தி வெற்றி பெற்றது. 

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.  டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயேஸ் ஐயர் சிறப்பாக விளையாடி, 45 ரன்கள் எடுத்தார். 

பின்னர், 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களம் இறங்கினர். 41 ரன்களுடன் ஜானி பேர்ஸ்டோ  ஆட்டமிழந்ததையடுத்து, வில்லியம்சன் ஆட்டத்தை தொடர்ந்தார். 10 ஓவர்களில் 71 ரன்களை எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இறுதியில் ஐதராபாத் அணி 18.5  ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்ததால், டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP