ஐபிஎல்: ஆண்டர் ரூசலின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா வெற்றி!

பெங்களூருவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட 206 ரன்களை 19.1 ஓவர்களில் எடுத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
 | 

ஐபிஎல்: ஆண்டர் ரூசலின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா வெற்றி!

பெங்களூருவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட 206 ரன்களை 19.1 ஓவர்களில் எடுத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. 

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பார்த்தீவ் பட்டேல், கோலி களமிறங்கினார்கள். இவர்கள் விக்கெட் விழக்ககூடாது என்ற நோக்கத்தில் சீரான இடைவெளியில் ரன்களை குவித்து வந்தனர். பட்டேல் 25 ரன்களில் ராணா பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு டிவில்லியர்ஸ் இறங்கி பொறுமையாக ஆடினார்.

ஒருபக்கம் நிதானமாக ஆடிய கோலி, ஐபிஎல்லில் தனது 35 -ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். இதன்பிறகு தான் ஆட்டமே சூடு பிடித்தது. ஒரு பக்கம் கோலி சிக்ஸ் அடிக்க, மறுபக்கம் 360 டிகிரியில் டிவில்லியர்ஸ் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசினார். இவரும் ஐபிஎல்லில் 30 -ஆவது அரைசதத்தை பதிவு செய்தார்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில், குல்தீப் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். சிறிது நேரத்தில் டிவில்லியர்ஸும் 63 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அடுத்து இறங்கிய ஸ்டோனிஸ் தன் பங்குக்கு அதிரடி காட்ட, இறுதியில் அந்த அணி 20 ஓவர்களின் முடிவில் அந்த 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்தது. 

206 ரன்கள் வெற்றி இலக்குடன் கொல்கத்தா அணி தமது ஆட்டத்தை தொடங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் களம் இறங்கினர். 10 ரன்களில் சுனில் நரைன் அவுட் ஆனதையடுத்து, ராபின் உத்தப்பா ஆட்டத்தை தொடர்ந்தார். 33 ரன்கள் எடுத்து ராபின் உத்தப்பா ஆட்டமிழந்தார். 

இதனையடுத்து கிறிஸ் லின்னுடன், நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். 15 ஓவர்களில் 134 ரன்களை மட்டுமே எடுத்தது கொல்கத்தா அணி. 30 பந்துகளில் 72 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. 16 ஓவர்களின் முடிவில் கிறிஸ் லின் 43 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் தினேஷ் கார்த்திக் ஆண்டர் ரூசல் ஆட்டத்தை தொடர்ந்தனர். 

17வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 19 ரன்களுடன் அவுட் ஆனார். பின்னர் சுப்மான் கில் களமிறங்கினார். 11 பந்துகளில் 29 ரன்கள் எடுக்க வேண்டிய நெருக்கடியான நிலை ஏற்பட்டது. ஆனால் ஆண்டர் ரூசலின் அதிரடி ஆட்டத்தால் 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கான 206 ரன்களை எடுத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆண்டர் ரூசல் 7 சிக்சர்கள் எடுத்ததால் மட்டுமே் கொல்கத்தா வெற்றி பெற்றது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP