ஐபிஎல் ஏலம் LIVE UPDATES: தமிழக வீரர் வருணுக்கு ரூ.8.4 கோடி!

2019ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் விஹாரி 2 கோடி ரூபாய்க்கும், அக்சர் பட்டேல் 5 கோடி ரூபாய்க்கும் வாங்கப்பட்டுள்ளனர்.
 | 

ஐபிஎல் ஏலம் LIVE UPDATES: தமிழக வீரர் வருணுக்கு ரூ.8.4 கோடி!

2019ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. ஏலம் குறித்த முக்கிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த பதிவை பின்தொடருங்கள்...

ஆக்ஷ்தீப் நாத்தை 3.6 கோடி ரூபாய்க்கு வாங்கியது ஆர்.சி.பி  (அடிப்படை தொகை ரூ.20 லட்சம்)

மீண்டும் குறைந்த விலைக்கு ஏலத்துக்கு வந்த யுவராஜ் சிங்கை மும்பை இந்தியன்ஸ் 1 கோடிக்கு எடுத்துள்ளது. (அடிப்படை தொகை - 1 கோடி)

15 வயதான பிராயாஸ் ரே பரமனை ஆர்.சி.பி 1.5 கோடிக்கு எடுத்துள்ளது (அடிப்படை தொகை ரூ.20 லட்சம்)

17 வயதான ப்ரப்சிம்ரன் சிங்கை பஞ்சாப் அணி 4.8 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது (அடிப்படை தொகை - 20 லட்சம்)

டெல்லி வீரர் ஹிம்மத் சிங்கை 75 லட்ச ரூபாய்க்கு ஆர்.சி.பி அணி எடுத்துள்ளது (அடிப்படை தொகை - 20 லட்சம்)

மேற்கிந்திய தீவுகளின் ஒஷானே தாமஸை 1.1 கோடிக்கு எடுத்தது ராஜஸ்தான் (அடிப்படை தொகை - 50 லட்சம்)

மேற்கிந்திய தீவுகள் அதிரடி பேட்ஸ்மேன் ரூதர்போர்டை 2 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது டெல்லி. (அடிப்படை தொகை - 40 லட்சம்)

வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரன், 3.4 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்கிறார்.  (அடிப்படை தொகை - 50 லட்சம்)

இங்கிலாந்து வீரர் சாம் குர்ரானை 7.4 கோடி ரூபாய்க்கு எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். (அடிப்படை தொகை - 2 கோடி) 

தென்னாபிரிக்க வீரர் காலின் இங்ரமை 6.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப். (அடிப்படை தொகை - 2 கோடி) 

தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை 8.4 கோடி ரூபாய்க்கு வாங்கியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் (அடிப்படை தொகை - 20 லட்சம்)

ஷிவம் துபேவை ஆர்.சி.பி அணி 5 கோடிக்கு வாங்கியுள்ளது. (அடிப்படை தொகை - 20 லட்சம்)

சிஎஸ்கே அணியின் மாஜி வீரர் மோஹித் ஷர்மாவை, சிஎஸ்கே அணி மீண்டும் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. (அடிப்படை தொகை - 50 லட்சம்)

வருண் ஆரோனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2.4 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது. (அடிப்படை தொகை - 50 லட்சம்)

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது ஷமியை பஞ்சாப் அணி, 4.8 கோடி ரூபாய்க்கு எடுத்துக் கொண்டது. (அடிப்படை தொகை - 1 கோடி)

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆஸ்தான வீரர் இலங்கையின் மலிங்காவை, 2 கோடி ரூபாய்க்கு அந்த அணி மீண்டும் எடுத்துக் கொண்டது. (அடிப்படை தொகை - 2 கோடி)

 வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவை 1.1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது டெல்லி கேபிட்டல்ஸ். (அடிப்படை தொகை - 75 லட்சம்)

ஐபிஎல் ஏலம் LIVE UPDATES: தமிழக வீரர் வருணுக்கு ரூ.8.4 கோடி!

இந்திய அதிரடி வீரர் ஜெயதேவ் உனத்கத்தை 8.4 கோடிக்கு எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். (அடிப்படை தொகை - 1.5 கோடி)

இந்திய வீரர் வ்ரிதிமான் சாஹாவை 1.2 கோடிக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். (அடிப்படை தொகை - 1 கோடி)

மேற்கிந்திய தீவுகள் விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரானை 4.2 கோடி ரூபாய்க்கு எடுத்தது பஞ்சாப். (அடிப்படை தொகை - 75 லட்சம்)

இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவை 2.2 கோடிக்கு எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். (அடிப்படை தொகை - 1.5 கோடி)

இந்திய வீரர் அக்சர் பட்டேலை 5 கோடி கொடுத்து வாங்கியுள்ளது டெல்லி கேபிட்டல்ஸ். (அடிப்படை தொகை - 1 கோடி)

மேற்கிந்திய தீவுகள் வீரர் ஹெட்மயரை 4.2 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது ஆர்.சி.பி அணி. (அடிப்படை தொகை - 50 லட்சம்)

மேற்கிந்திய தீவுகள் வீரர் கார்லோஸ் ப்ராத்வைட்டை 5 கோடி ரூபாய்க்கு எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். (அடிப்படை தொகை - 75 லட்சம்)

ஐபிஎல் ஏலம் LIVE UPDATES: தமிழக வீரர் வருணுக்கு ரூ.8.4 கோடி!

இந்திய ஆல் ரவுண்டர் ஹனுமா விஹாரியை 2 கோடி கொடுத்து வாங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. (அடிப்படை தொகை - 50 லட்சம்)

முதல் சுற்றில் விலை போகாத வீரர்கள்

மனோஜ் திவாரி, புஜாரா, அலெக்ஸ் ஹேல்ஸ், ப்ரெண்டன் மெக்குல்லம், மார்டின் குப்டில், க்றிஸ் வோக்ஸ், க்றிஸ் ஜோர்டன், யுவராஜ் சிங், நமன் ஓஜா, பென் மெக்டெர்மோட், ராகுல் ஷர்மா.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP