ஐபிஎல்2019: சென்னை அணி வெற்றி; சான்ட்னெர் அபார ஆட்டம் !

ஜெய்ப்பூரில் நேற்று (11ஆம் தேதி) நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
 | 

ஐபிஎல்2019: சென்னை அணி வெற்றி; சான்ட்னெர் அபார ஆட்டம் !

ஜெய்ப்பூரில் நேற்று (11ஆம் தேதி) நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் தொடக்க வீரர்களாக ரஹானே, பட்லர் களமிறங்கினர். 31 ரன்களுக்கு அந்த அணியின் முதல் விக்கெட்டாக சாஹர் பந்துவீச்சில் ரஹானே (14 ரன்) அவுட் ஆனார். இவரைத்தொடர்ந்து, தாகூர் பந்துவீச்சில் பட்லரும் ( 23 ரன்) காலியானார். சஞ்சு சாம்சனும் வந்த வேகத்திலேயே செல்ல, அடுத்து வந்த ஸ்மித் சிறிது நேரமே தாக்குப்பிடித்து பெவிலியன் திரும்பினார்.

6 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்து தடுமாறி வந்த ராஜஸ்தான் அணிக்கு, பென் ஸ்டோக்ஸ் (28 ரன்) நம்பிக்கை அளிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவரும் சஹார் பந்துவீச்சில் போல்ட் ஆனார். கடைசி ஓவரை வீசிய தாகூர் 18 ரன்களை விட்டுகொடுத்ததால், கெளரவமான இலக்கை எட்டியது ராஜஸ்தான். இறுதியில், அந்த அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் சேர்த்தது. 

இதனையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் ரன் எதுவும் எடுக்காமலும், சுரேஷ் ரெய்னா 4 ரன்னும், பாப் டுபிளிஸ்சிஸ் 7 ரன்னும், கேதர் ஜாதவ் 1 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

கடைசி 6 பந்துகளில் சென்னை அணி வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தை ரவீந்திர ஜடேஜா சிக்சர் ஆக்கினார். 2-வது பந்தில் (நோ-பால்) ரவீந்திர ஜடேஜா ஒரு ரன் எடுத்தார். பிரீ ஹிட் வாய்ப்பை எதிர்கொண்ட டோனி 2 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் 4 ரன் தேவை என்ற நிலையில் சான்ட்னெர் அந்த பந்தை சிக்சர் ஆக்கினார். 

20 ஓவர்களில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. ஆட்டநாயகன் விருதை சென்னை அணியின் கேப்டன் டோனி பெற்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP