இந்தியாவின் 500வது ஒருநாள் வெற்றி!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இது ஒருநாள் அரங்கில் இந்திய அணி வெல்லும் 500வது போட்டியாகும்.
 | 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரில் முன்னிலை எடுத்தது. இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில், 250 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது. இக்கட்டான சூழலில், கேப்டன் கோலி சதமடித்தார்.

நல்ல துவக்கம் பெற்றாலும், ஆஸ்திரேலியா அணி, இந்திய அணியின் கடைசிகட்ட பந்துவீச்சில் நிலைகுலைந்தது. இந்திய வீரர், குல்தீப் யாதவ், பும்ரா, விஜய் சங்கர் ஆகியோர் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த வெற்றி, இந்தியாவின் 500வது ஒருநாள் வெற்றியாகும். 1975ம் ஆண்டு இந்தியா தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP