ராணுவ தொப்பி அணிந்து களமிறங்கிய இந்திய கிரிக்கெட் படை !

புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் நினைவாக, ஆஸ்திரேலியாவுக்குான எதிரான இன்றைய போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ராணுவ தொப்பியை அணிந்து விளையாடி வருகின்றனர்.
 | 

ராணுவ தொப்பி அணிந்து களமிறங்கிய இந்திய கிரிக்கெட் படை !

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ராணுவ தொப்பியை அணிந்து விளையாடி வருகின்றனர்.

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கெனவே, ஹைதராபாத் மற்றும் நாக்பூரில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம், 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில்,  இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி, தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்து தற்போது விளையாடி வருகிறது.

இந்த ஆட்டத்தில் குறிப்பிடத்தக்க முக்கிய விஷயமாக, ஒருநாள் போட்டிகளின்போது இந்திய அணி  வீரர்கள் வழக்கமாக அணியும் பிபிசிஐ-யின் இலச்சினை (லோகோ) பொறிக்கப்பட்ட நீல நிற தொப்பிக்கு பதிலாக, இந்திய ராணுவத்தின் தொப்பையை அணிந்து விளையாடி வருகின்றனர்.

கடந்த மாதம் 14 -ஆம் தேதி, ஜம்மு -காஷ்மீர் மாநிலம்,  புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் நினைவாக, இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பியை அணிந்து விளையாடுகின்றனர்.

மேலும், இன்றைய போட்டிக்கான தங்களது ஊதியத்தையும் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தரவும் இந்திய கிரிக்கெட் அணி தீர்மானித்துள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP