ஐசிசி-ன் எஃப்.டி.பி: டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா - வெ.இ மோதல்

ஐசிசி வெளியிட்டுள்ள எதிர்கால சுற்றுப்பயண திட்டத்தில், புதிய போட்டிகளான டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் ஆட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
 | 

ஐசிசி-ன் எஃப்.டி.பி: டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா - வெ.இ மோதல்

ஐசிசி வெளியிட்டுள்ள எதிர்கால சுற்றுப்பயண திட்டத்தில், புதிய போட்டிகளான டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் ஆட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 

ஆஷஸ் தொடரின் பரம போட்டியாளர்களாக இங்கிலாந்து - ஆஸ்திரேலியா, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை துவக்கி வைக்கின்றன. டாப் 9 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. இரண்டு கட்டமாக நடைபெறும் இப்போட்டியில், ஒரு அணி தனது சொந்த மண்ணில் 6 தொடர்களையும், வெளியூரில் 6 தொடர்களையும் சந்திக்கும். 

மற்ற டெஸ்ட் தொடர் சுற்றுப்பயணத்தில், இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்தில் இலங்கை அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான், அடுத்த ஆண்டு நவம்பரில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையில் விளையாடுகிறது. 

ஐசிசி-ன் எதிர்கால சுற்றுப்பயண திட்டத்தில், ஒருநாள், டெஸ்ட், டி20 ஆகிய மூன்று தொடர்களும் 2019 முதல் 2023 வரை இடம் பெற்றிருக்கின்றன. டெஸ்ட் போட்டியில் இணைந்திருக்கும் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணி, அடுத்த ஆண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பிப்ரவரி மாதம் போட்டியிடுகின்றன. 2019-2022ல் ஐந்து நாள் போட்டியில், இவ்விரு அணிகள் பங்கேற்கும். 

ஆப்கானிஸ்தானுக்கு, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் போட்டிகள் நடைபெறுகிறது. அயர்லாந்து, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை நடத்துகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 

12 டெஸ்ட் நாடுகளுடன், ஒருநாள் லீக் போட்டியில் நெதர்லாந்து, 13-வது அணியாக பங்கேற்கின்றது. இதன் மூலம், 2023 உலக கோப்பைக்கு நெதர்லாந்து தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கும். போட்டியை நடத்தும் இந்தியாவுடன், அதிக தரவரிசையை கொண்ட ஏழு அணிகள் நேரடியாக போட்டியில் பங்கேற்கும். மீதமிருக்கும் ஐந்து அணிகளுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும். 

ஆண்கள் அணியின் எதிர்கால சுற்றுப்பயண திட்டத்தில் இணைக்கப்பட்டவை (2018-23):

ஐசிசி உலக கோப்பை — 2019 மற்றும் 2023

ஐசிசி உலக டி20 — 2020 மற்றும் 2021

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பாகம் 1 — 2019-2021 (ஃபைனல் 2021)

பாகம் 2 — 2021-2023 (ஃபைனல் 2023)

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP