ஆசிய கோப்பை: சூப்பர் 4ல் இன்று இந்தியா - வங்கதேசம் மோதல்

14-வது ஆசிய கோப்பை போட்டி யுஏஇ-ல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஆகிய நான்கு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன.
 | 

ஆசிய கோப்பை: சூப்பர் 4ல் இன்று இந்தியா - வங்கதேசம் மோதல்

ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் முதல் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன. 

14-வது ஆசிய கோப்பை போட்டி யுஏஇ-ல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஆகிய நான்கு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன. இலங்கை மற்றும் ஹாங்காங் வெளியேற்றப்பட்டது. 

இந்த நிலையில் இன்று சூப்பர் 4 சுற்று தொடங்குகிறது. இதில் துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கும் முதல் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோத உள்ளன. வங்கதேச அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இருந்தது. 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி கண்டது. லீக் போட்டியில் இந்தியா, ஹாங்காங் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி உள்ளது.

ஆசிய கோப்பை: சூப்பர் 4ல் இன்று இந்தியா - வங்கதேசம் மோதல்

சூப்பர் 4ல் அபு தாபியில் நடக்க இருக்கும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. லீக் போட்டியில் தான் எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் வெற்றி கண்டது. அந்த அணி இலங்கை மற்றும் வங்கதேச அணியை தோற்கடித்தது. பாகிஸ்தான், ஹாங்காங்கை வென்றும், இந்தியாவிடம் வீழ்ந்தும் இருந்தது. 

சூப்பர் 4 சுற்றில் இன்று இரண்டு போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு துவங்க இருக்கின்றன. சூப்பர் 4ல் நான்கு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் இறுதிச் சுற்றில் 28ம் தேதி பலப்பரீட்சை நடத்த இருக்கிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP