உலக கோப்பை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு: ராகுல் டிராவிட்

2019ம் ஆண்டுக்கான ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கே அதிகம் இருக்கிறது என்று இந்தியா ஏ அணியின் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
 | 

அவர் சமீபத்தில்அளித்த பேட்டியில் இதுகுறித்து கூறும் போது, "இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அடுத்தடுத்த நாட்களில் இன்னும் சிறப்பான இந்திய அணியை காணுவோம். 

இந்த உலக கோப்பை தொடரை 1999ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலககோப்பைத் தொடருடன் ஒப்பிடக்கூடாது. இங்கிலாந்தில் ஆடுகளங்கள் மிகவும் சமமாக இருக்கும். இது மிகவும் அதிக ரன்கள் குவித்த உலக கோப்பை தொடராக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

இந்தியா ஏ அணி இங்கிலாந்தில் விளையாடும் போது தொடர்ச்சியாக 300 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டது. 1999ம் ஆண்டு உலக கோப்பையை காட்டிலும் போர்டில் அதிக ரன்கள் வரும்.

1999ல் டியூக்ஸ் பந்து பயன்படுத்தப்பட்டது. தற்போது இரண்டு கூக்கப்புரா பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பீல்டிங் கட்டுப்பாடுகள் மாறுபட்டுள்ளது. எனவே இரண்டு தொடர்களையும் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது’’ என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP